|
இலங்கைப்
பாராளுமனற்றம் கலைக்கப்படலாமென எதிர்வு கூறப்படுறது. நாளை மறுதினம்
ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும்
கட்சிகளுடன் முக்கிய சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது
பொதுக்கட்மைப்பு ஒன்றை உருவாக்குவது உள்ளிட்ட முக்கிய விடயங்கள்
குறித்து கலந்துரையாடப்பட்டு கூட்டணிக் கட்சிகளின் முடிவுகள்
அறியப்படவுள்ளது.
இந்த விடயங்களில் ஜனாதிபதி தனது
நிலைப்பாட்டினை அறிவித்து அதற்கு ஆதரவு வழங்குமாறு கூட்டணிக்
கட்சிகளைக் கோருவார் என்றும் ஜனாதிபதியின் கோரிக்கைக்கு சாதகமான பதில்
கிடைக்காவிட்டால் அரசாங்கத்தை கலைத்துவிட்டு மீண்டும் ஒரு
தேர்தலுக்குகான அறிவிப்பை ஜனாதிபதி வெளியிடுவார் என்றும் ஜனாதிபதி
மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் தற்போது தனது
முக்கிய ஆலோசகர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி அடுத்த கட்ட
அரசியல் நகர்வுகள் குறித்தும் சில முக்கியமான விடயங்களை வெளியிடுவார்
என்றும் எதிர்பாhக்கப்படுகின்றது.
மீண்டும் ஒரு தேர்தல்
நடத்தப்படுமானால் பொதுஜன ஐக்கிய முன்னணி என்ற பெயரிலேயே ஜனாதிபதி
தலைமையிலான அணி போட்டியிடும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஜே.வி.பி தனித்துப் போட்டியிடும்
நிலை உருவாவது இலங்கை அரசியலில் தனித்து ஒரு கட்சியோ கூட்டணியோ ஆட்சி
அமைக்க முடியாத நிலையினை ஏற்படுத்தும் எனச் சுட்டிக்காட்ப்பட்டுள்ளது
ஆட்சி ஏற்படுத்துவதற்குச்
சிறுபான்மை கட்சிகளின் ஆதரவை பெரும்பான்மைக் கட்சிகள் இரண்டும் வேண்டி
நிற்கும் நிலையொன்று ஏற்படுவது தமிழ் மக்களைப் பொறுத்த வரையில்
ஆராக்கியமானதாக அமையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
|