முகப்புப் பக்கம

 

தமிழீழத் தேசியத்தலைவரின் மாவீரர்தின உரை 2004

தமிழீழ விடுதலைப்புலிகளின் சமாதானச் செயலகம்

தமிழீழ விளையாட்டுத்துறை

நாணயமாற்று வீதம்

 
 
 
பயிற்சியின் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் போராளி ஒருவர் வீரச்சாவு 2005.04.25

 

பயிற்சியின் போது ஏற்பட்ட தவறுதலான வெடிவிபத்தின்போது போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார். சோதியா படையணியைச் சேர்ந்த கப்டன் ரகுமதி என்ற போராளியே வீரச்சாவடைந்தவராவார். இவரது இறுதி வீரவணக்க நிகழ்வுகள் நேற்றுக் காலை 10.30 மணியளவில் விடுதலைப்புலிகள் போர் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்றது.

கப்டன் ரகுமதி(திருமகள்) யாழ்ப்பாண மாவட்டத்தைச் சொந்த முகவரியாகவும் இரவி கடை, வேப்பங்குளம், வவுனியா மற்றும் பிள்ளையார் கோவிலடி,  செம்பங்குன்று முகாம்,  மன்னார் ஆகியவற்றைத் தற்காலிக முகவரிகளாகவும் கொண்டவர். இவரது இயற்பெயர் கமலேந்திரன் ஜோதிகா.

இவரின் இறுதி வீரவணக்க நிகழ்வில் பொதுச்சுடரினை வடபோர்முனைக் கட்டளைத் தளபதி கேணல் தீபன் அவர்களும் ஈகைச்சுடரினை போர்ப்பயிற்சிக் கல்லூரி ஆசிரியர் அமுதக்குமரன் அவர்களும் ஏற்ற மலர்மாலையினை சோதியா படையணித் தளபதி கேணல் துர்க்கா அணிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அஞ்சலி உரையினை மஞ்சுளா அவர்களும் நினைவுரையினை சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணித் தளபதி லெப்.கேணல் நகுலன், ராஜன் கல்விப்பிரிவு பொறுப்பாளர் கீதன் மாஸ்ரர் ஆகியோரும் நிகழ்த்த அஞ்சலிக்கவிதையினை போராளி கலைத்தமிழ் போராளி குமுதினி ஆகியோரும் நிகழ்த்தினர்.
 

முன்னே                          

 

All Rights Reserved. Financial Wing,Libiration Tigers of  Tamileelam.