முகப்புப் பக்கம

 

தமிழீழத் தேசியத்தலைவரின் மாவீரர்தின உரை 2004

தமிழீழ விடுதலைப்புலிகளின் சமாதானச் செயலகம்

தமிழீழ விளையாட்டுத்துறை

நாணயமாற்று வீதம்

 
 
 
சீமெந்து, பெற்றோல் எடுத்துச் செல்ல இராணுவத்தினர் தடை! 2005.04.25
 
திருகோணமலைக் கட்டைப்பறிச்சான் சிறீலங்கா இராணுவச் சோதனைச் சாவடியூடாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் சீமெந்து மற்றும் கொள்கலன்களில் பெற்றோல் எடுத்துச் செல்வதற்கு இராணுவத்தினர் தடை விதித்துள்ளனர்.
இத்தடை நேற்று (24.04.05) தொடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இச்சோதனைச் சாவடியூடாக மின்கலங்களை எடுத்துச் செல்வதற்கும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து எடுத்து வருவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

சிறீலங்கா அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே 2002 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குப் பொருட்கள் கொண்டு செல்வதற்கு எவ்வித தடைகளும் விதிக்கப்பட்டிருக்கவில்லை.

ஆனால் அண்மைக்காலமாக இந்த உடன்படிக்கையை மீறும் வகையில் திருகோணமலை கட்டைப்பறிச்சான் இராணுவ முகாம் இராணுவத்தினர் தடைகளை ஏற்படுத்தியிருப்பது பொதுமக்களுக்குப் பெரும் இடர்களை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றிப் பொதுமக்கள் விடுதலைப்புலிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையிலான கட்டுப்பாட்டுப் பகுதிக்கான எல்லைகளாகக் கட்டைப்பறிச்சான், மகிந்தபுரம் ஆகிய இராணுவ முகாம்கள் விளங்குகின்றன.

மகிந்தபுரத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் நடைபெறுவதில்லை. ஆனால் கட்டைப்பறிச்சான் சோதனைச் சாவயூடாக இப்பொருட்களை எடுத்துச் செல்வதற்குத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளமையானது ஒரு போர் நிறத்த மீறல் என விடுதலைப்புலிகளின் அரசியல் துறையினர் திருகோணமலைப் போhர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருக்கு அறிக்கை ஒன்றினை சமர்ப்பித்துள்ளனர்.

இராணுவத்தினரின் இச்செயற்பட்டினாற் கட்டைப்பறிச்சான் இராணுவ முகாம் சிறீலங்கா இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள்ளும் சிறீலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளும் இல்லாத தோற்றத்தைக் காட்டுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 25 ஆண்டு கால உள்நாட்டு யுத்தத்தினால் ஏற்பட்ட அழிவுகளைப் பொதுமக்கள் மீள் நிர்மாணம் செய்து மீளக்குடியமர முயற்சித்துக் கொண்டிருக்கும் வேளையிலும் ஆழிப்பேரலைத் தாக்கத்தினால் இடம்பெயர்ந்த பொதுமக்களுக்கான தற்காலிகக் குடியிருப்புக்களைத் தொண்டர் நிறுவனங்கள் அமைத்துக் கொடுத்து வரும் இந்நிலையில் இராணுவத்தினரின் இச்செயல் தமிழ்மக்கள் தமது தாயக பூமியில் சுய நிர்ணயத்துடன் வாழ்வதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்பதை பறைசாற்றுகின்றது.
 

முன்னே                          

 

All Rights Reserved. Financial Wing,Libiration Tigers of  Tamileelam.