முகப்புப் பக்கம

 

தமிழீழத் தேசியத்தலைவரின் மாவீரர்தின உரை 2004

தமிழீழ விடுதலைப்புலிகளின் சமாதானச் செயலகம்

தமிழீழ விளையாட்டுத்துறை

நாணயமாற்று வீதம்

 
 
 

காந்தரூபன் அறிவுச்சோலை மாணவர் சாதாரண தரத்திற் சித்தி

காந்தரூபன் அறிவுச்சோலை சிறுவர் இல்லத்திலிருந்து க. பொ. த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய 11 மாணவரில் 8 பேர் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.

அவர்களின் விரிப்பு வருமாறு :-

  அ. வதனரூபன்  4A, 4B, 2C
  சி. வினோத் 3A, 2B, 4C, 1S
  தி. துஷிகரன் 2B, 4S
  பே. சதீஸ் 1A, 3C, 2S
  சி. தேவதாஸ் 1A, 4C, 3S
  மு. பாலன் 1A, 1B, 3C, 5S
  க. விஜிதரன் 1A, 3C, 4S
  இ. ரமேஸ்குமார் 1A, 3B, 4C

சிறிலங்காவின் பொருளாதாரம் வீழ்ச்சிப் போக்கிற் செல்கிறது

- மத்திய வங்கி

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியின்போது 2003 ஆம் ஆண்டு டிசம்பரில் 6.6 ஆக இருந்த சிறிலங்காப் பொருளாதார வளர்ச்சியானது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ஆட்சியில், 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமளவில் 4.4 விழுக்காட்டினாற் குறைவடைந்துள்ளதாகச் சிறிலங்கா மத்திய வங்கியின் அறிக்கை தெரிவிக்கின்றது.

அவ்வறிக்கையில் மேலுந் தெரிவிக்கப்பட்டதாவது, சிறிலங்காவின் பொருளாதாரம் மீண்டும் பின்நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளது. விவசாயம், மீன்பிடி மற்றும் சிறுகைத் தொழில் ஆகிய துறைகளே வீழ்ச்சியடைந்து வருதாகக் கடந்த மார்ச் மாத இறுதியில் மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மூன்று அமைச்சுக்களும் மக்கள் விடுதலை முன்னணியின் அமைச்சர்களிடமிருப்பது குறிப்பிடத்தக்கது.


2003 ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில், சேவை மற்றும் தொழிற்துறை சிறப்பாகச் செயற்பட்டது போல காணப்பட்டாலும் விவசாயத்துறையின் சில பிரிவுகளில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக 2004 இன் மூன்றாவது காலாண்டுப்பகுதியிற் பொருளாதாரப் பின்னடைவுகள் ஏற்பட்டிருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது. இது தவிர பொலநறுவை மற்றும் குருணாகல மாவட்டங்களில் நெல் உற்பத்தியும் கணிசமான அளவு குறைவடைந்துள்ளது.

 

முன்னே

 

All Rights Reserved. Financial Wing,Libiration Tigers of  Tamileelam.