முகப்புப் பக்கம

 

தமிழீழத் தேசியத்தலைவரின் மாவீரர்தின உரை 2004

தமிழீழ விடுதலைப்புலிகளின் சமாதானச் செயலகம்

தமிழீழ விளையாட்டுத்துறை

நாணயமாற்று வீதம்

 
 
 

ஆனையிறவு வெற்றிவிழாவைச் சிறப்பித்துப் போராளிகளுக் கிடையே மாபெரும் விளையாட்டுப்போட்டியும் கலைநிகழ்வும் 2005.04.23

 

240 ஆண்டுகால ஆக்கிரமிப்புச் சின்னமாக விளங்கிய ஆணையிறவுப் படைத்தளம் வீழ்ச்சி கண்டு நேற்றுடன் ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனை முன்னிட்டுத் தமிழீழ விடுதலைப்புலிகளின் படையணிகள் நேற்று முதல் 28ஆம் நாள் வரை விளையாட்டுப்போட்டிகளையும் கலைநிகழ்வுகளையும் மேற்கொள்ளவுள்ளனர்.


இப்போட்டிகளின் தொடக்க நிகழ்வாக நேற்றுக்காலை பளை புதுக்காட்டுச் சந்தியில் தொடங்கிய மரதன் ஓட்டப்போட்டி முகமாலை வரையான 10 கிலோமீற்றர் தூரம் கொண்டதாக அமைந்திருந்தது. தமிழீழ விடுதலைப்புலிகளின் சமர் அணியினரின் பெண் போராளிகள் கனரக ஆயுதங்களைத் தாங்கியவாறு இம்மரதனோட்டப் போட்டியிற் பங்குபற்றினர்.


தொடர்நிகழ்வாக நாளை விடுதலைப்புலிகளின் ஆண் படையணிகளுக்கான மரதன் ஓட்டப்போட்டி நடைபெறும்.


நேற்றைய இந்நிகழ்வுகள் வடபோர்முனைக் கட்டளைத் தளபதி கேணல் தீபன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மரதன் ஓட்டப் போட்டியினை மகளிர் படையனித் தளபதி கேணல் விதூ அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.


ஆனையிறவு வெற்றி விழா நாள், தீச்சுவாலை முறியடிப்பு நாள் ஆகியவற்றை முன்னிட்டு கடந்த 20, 21 ஆம் திகதிகளில் விடுதலைப்புலிகளின் போர்ப் பயிற்சிக் கல்லூரியில் பல்வேறுபட்ட போட்டிகள் நடாத்தப்பட்டன.


சமரணிகளுக்கிடையே நடைபெற்ற பேச்சு, கவிதை, நடனம் போன்ற துறைகளில் போராளிகள் தமது திறமைகளை வெளிக்காட்டினர். நடைபெறவுள்ள போட்டிகளிற் கலந்துகொண்டு வெற்றி பெறுவோருக்கு 28ஆம் நாள் நடைபெறும் இறுதி நிகழ்விற் பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.

 

முன்னே                                                      படத்தொகுப்பு

 

All Rights Reserved. Financial Wing,Libiration Tigers of  Tamileelam.