|
|
பொதுக்கட்டமைப்பில்
புலிகள் நம்பிக்கையிழப்பு - புலித்தேவன்
2005.04.25பொதுக்கட்டமைப்பை அமைப்பதில்
அரசாங்கம் தொடர்ந்து ஏமாற்றி வருவதால் இது தொடர்பில் தாங்கள் தனித்து
செயற்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும்ää இது குறித்துத்
தலைமைப் பீடம் விரைவில் சில முக்கிய முடிவுகளை எடுக்குமெனவும்
விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் திரு. புலித்தேவன்
தெரிவித்துள்ளார்.

|
இலங்கை
பாராளுமன்றம் கலைக்கப்படலாம்?
2005.04.25
இலங்கைப் பாராளுமனற்றம் கலைக்கப்படலாமென
எதிர்வு கூறப்படுறது. நாளை மறுதினம் ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர்
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் முக்கிய சந்திப்பு ஒன்றை
நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 |
பயிற்சியின் போது ஏற்பட்ட வெடிவிபத்தில்
போராளி ஒருவர் வீரச்சாவு 2005.04.25
பயிற்சியின் போது ஏற்பட்ட தவறுதலான வெடிவிபத்தின்போது
போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார். சோதியா படையணியைச் சேர்ந்த
கப்டன் ரகுமதி என்ற போராளியே வீரச்சாவடைந்தவராவார். இவரது இறுதி
வீரவணக்க நிகழ்வுகள் நேற்றுக் காலை 10.30 மணியளவில் விடுதலைப்புலிகள்
போர் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்றது.

|
|
சீமெந்து, பெற்றோல் எடுத்துச் செல்ல
இராணுவத்தினர் தடை! 2005.04.25
திருகோணமலைக் கட்டைப்பறிச்சான் சிறீலங்கா இராணுவச்
சோதனைச் சாவடியூடாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்
பகுதிகளுக்குச் சீமெந்து மற்றும் கொள்கலன்களில் பெற்றோல் எடுத்துச்
செல்வதற்கு இராணுவத்தினர் தடை விதித்துள்ளனர்.

|
வன்னியில் மிகையாகவுள்ள நெல்லைச்
சந்தைப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பெற்றுள்ளன. 
2005.04.23
வன்னியில் மிகையாகவுள்ள நெல்லைச் சந்தைப்படுத்துவதற்கு
ஏற்பாடுகள் செய்யப்பெற்றுள்ளன. 2005.04.23 ஆம் நாளிலிருந்து
வெளிமாவட்டங்களுக்கு நெல்லை எடுத்துச் செல்லலாமென்பதை வருவாய்ப்பகுதி
அறிவித்துள்ளது.
|
ஆனையிறவு வெற்றிவிழாவைச் சிறப்பித்துப்
போராளிகளுக்கிடையே மாபெரும் விளையாட்டுப்போட்டியும் கலைநிகழ்வும்
2005.04.23240
ஆண்டுகால ஆக்கிரமிப்புச் சின்னமாக விளங்கிய ஆணையிறவுப் படைத்தளம்
வீழ்ச்சி கண்டு நேற்றுடன் ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனை
முன்னிட்டுத் தமிழீழ விடுதலைப்புலிகளின் படையணிகள் நேற்று முதல்
28ஆம் நாள் வரை விளையாட்டுப்போட்டிகளையும் கலைநிகழ்வுகளையும்
மேற்கொள்ளவுள்ளனர்.

|
|
காந்தரூபன்
அறிவுச்சோலை மாணவர் சாதாரண தரத்திற் சித்தி
2005.04.22
காந்தரூபன் அறிவுச்சோலை சிறுவர் இல்லத்திலிருந்து க.
பொ. த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய 11 மாணவரில் 8 பேர் சிறந்த
பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.

|
|
சிறிலங்காவின்
பொருளாதாரம் வீழ்ச்சிப் போக்கிற் செல்கிறது
2005.04.22
- மத்திய
வங்கி
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியின்போது
2003 ஆம் ஆண்டு டிசம்பரில் 6.6 ஆக இருந்த சிறிலங்காப் பொருளாதார
வளர்ச்சியானது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ஆட்சியில், 2004 ஆம்
ஆண்டு டிசம்பர் மாதமளவில் 4.4 விழுக்காட்டினாற் குறைவடைந்துள்ளதாகச்
சிறிலங்கா மத்திய வங்கியின் அறிக்கை தெரிவிக்கின்றது. |
|
தேச விரோதிகளை ஒற்றர் படையாக
பயன்படுத்திய சிங்கள இராணுவமே சொறிவில சம்பவத்துக்குப் பொறுப்பு :
- விடுதலைப்புலிகள்
2005.04.15
தமிழீழத் தேச விரோதிகளை ஒற்றர்
படையாக பயன்படுத்திய சிறீலங்கா இராணுவமே சொறிவில துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று தமிழீழ
விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.
 |
|
முகப்புப் பக்கம் |